Home » » பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யின் சிரேஸ்ட ஆசிரியரான எம்.ஐ.எம்.அஸ்ஹர் எதிர்வரும் 1.05.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வுபெறுகின்றார்.

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யின் சிரேஸ்ட ஆசிரியரான எம்.ஐ.எம்.அஸ்ஹர் எதிர்வரும் 1.05.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வுபெறுகின்றார்.

 


சாய்ந்தமருது 17 , ஓய்வுபெற்ற அதிபர் மர்ஹும்  ஏ.ஸி.எம்.இப்றாஹிம் , மர்ஹுமா கதீஜா இப்றாஹீம் தம்பதிகளின் நான்காவது புதல்வரும்  பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யின் சிரேஸ்ட ஆசிரியருமான  எம்.ஐ.எம்.அஸ்ஹர் எதிர்வரும் 1.05.2021 அன்று தனது 60 வயதில் ஓய்வுபெறுகின்றார்.


கல்வி கற்பித்தல்  புலத்தில் 35 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இவர் தனது ஆரம்பக் கல்வியை குருநாகல் மாவட்டத்திலுள்ள பக்மீகொல்ல அல் மினா மகா வித்தியாலயத்திலும் தரம் இரண்டு முதல் ஐந்து வரை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும்  , தரம் ஆறு முதல் உயர்தர உயிரியல் விஞ்ஞானப்பிரிவு வரை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் சிறிது காலம் யாழ்ப்பாணம் வைத்தியேஸ்வரா கல்லூரியிலும் கல்வி கற்றார்.

1982 முதல்  1985 வரை மொரட்டுவ பல்கலைக் கழகத்திற்கு தேசிய டிப்ளோமா தொழில்நுட்பம் NDT (Agriculture Engineering) விவசாய பொறியியல் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டு  அம்பாறை ஹார்டி சிரேஸ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கில மொழி மூலமாக மூன்று வருட கற்கையை நிறைவு செய்திருந்தார்.
இவரது தந்தை சாய்ந்தமருது கடற்கரையோர பிரதேச மக்கள் கல்வியில் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த கால கட்டத்தில் அமைச்சராக இருந்த மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் அவர்களின் ஆலோசனையின் பேரில் சாய்ந்தமருது 6 ஆம் பிரிவில்  (தற்போது 17 ஆம் பிரிவு) சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் ஒரு பாடசாலயை ஆரம்பித்து அதன் ஸ்தாபக அதிபராகவும் கடமையாற்றி இருந்தார்.தனது தந்தை வழியிலேயே தானும் கல்விப் புலத்திற்குள் நுழைய வேண்டும் என்ற ஆசையில் ஆசிரிய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஆசிரிய சேவையில் காலடி வைத்த இவர் 1985.12.26 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் உள்ள மல்வான அல் முபாரக் தேசியக் கல்லூரியில் (முஸ்லிம் ஆண் பெண் கலவன் பாடசாலை )முதல் நியமனத்தைப் பெற்று அங்கு உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஆரம்பித்து அதன் பகுதித் தலைவராக இருந்து மாணவர்களுக்கு தாவரவியல் பாடத்தை கற்பித்து கம்பஹா மாவட்டதிலிருந்தே மருத்துவம் , பொறியியல் , பல்மருத்துவம், விவசாயம், விஞ்ஞானத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல இவர் காரணமாக இருந்துள்ளார்.

10 வருடங்களாக மல்வான அல் முபாரக் தேசியக் கல்லூரியில் தாவரவியல் பாடத்தை கற்பித்த இவர் 1994 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் தான் கல்வி கற்ற கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரிக்கு (முஸ்லிம் ஆண்கள் பாடசாலை )இடமாற்றம் பெற்று வந்தார் அங்கு கடந்த 22 வருடங்களாக உயர்தர விஞ்ஞானப் பிரிவில் தாவரவியல் பாட ஆசானாகவும், கல்லூரியில் ஆங்கில பிரிவு bilingual ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் பகுதித் தலைவராகவும், தரம் 6 முதல் தரம் 8 வரையுள் பகுதிகளுக்கு பகுதித் தலைவராகவும் , ஆசிரிய நூலகராகவும், அதிபர் காரியாலய நிர்வாக பொறுப்பாளராகவும், விளையாட்டுக் குழு செயலாளராகவும், சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைக்கான சுற்றாடல் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அஹ்ஸன் அக்தர் , அக்மல் சிபாக் , அஸ்பாக் அஹமட் , அல் அபான் ஆகிய நான்கு ஆண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் சாய்ந்தமருதில் புகழ்பூத்த குடும்பத்தைச் சேர்ந்த யூசுப் றஸீதாவை துணைவியாக்கிக் கொண்டார்.

பல் துறையிலும் செயலாற்றக்கூடிய இவர் தமிழ் , ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பாண்டித்துவம் பெற்றவராவார்.

இலங்கையில் வெளியாகும் தமிழ் , சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல தேசிய பத்திரிகைகளுக்கு சிரேஸ்ட ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.தனது உயர்ச்சில் பெரும் பங்கு வகிக்கும் தனக்கு அறிவூட்டிய தமிழ் ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களிடம் கற்ற கல்வியை அதே சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் 
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி க்கு தானாக விரும்பி இடமாற்றம் பெற்றுவந்த இவர் 3
1.5.2021 முதல் ஓய்வு பெற்று செல்கின்றார்.
கல்வித்துறையில் மட்டுமல்ல விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கிய இவர் 1980 ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேசத்தின் முதிசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்து அக் கழகத்தின் செயலாளராகவும் 2000 ஆம் ஆண்டு முதல் அதன் தலைவராகவும் இருந்து வந்துள்ளதுடன் சாய்ந்தமருது தாமரை விளையாட்டு மைதானம் உருவாவதற்கம் காரணகர்த்தாவாகவும் திகழ்ந்துள்ளார்.
கலைப் பணியினை தொடர கல்முனை கலை இலக்கிய பொதுப்பணி மன்றம்  , சமூகம் பணியினை தொடர கிழக்கு நட்புறவு ஒன்றியம் ஆகியவற்றிலும் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.
தாவரங்களோடு மிகவும் பற்றுள்ள இவர் தனது வீட்டுத் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன பல்லின தாவரங்களை பராமரித்து வருவதுடன் வீட்டுச் சூழலையும் அழகாக வைத்துள்ளார். சூழலுக்கு உரத்து பிடிக்காத மரங்களை வளர்த்து அதனை பயன்பெறும் மரங்களாக மாற்றிய பெருமையும் இவரையே சாரும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |