Advertisement

Responsive Advertisement

திரு.நாராயணப்பிள்ளை நாகேந்திரன் இலங்கை அதிபர் சேவை வகுப்பு - 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.


எம்.ஐ.எம்.அஸ்ஹர்


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடியில் பிரதி அதிபராக கடமையாற்றும் விசேட பயிற்றப்பட்ட விவசாய ஆசிரியரான திரு.நாராயணப்பிள்ளை நாகேந்திரன் இலங்கை அதிபர் சேவை வகுப்பு - 1 இற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் கலைமாமணி, இந்து தர்மாசிரியர் , பட்டப்பின் கல்வி டிப்ளோமா , பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா , கல்வி முகாமைத்துவ டிப்ளோமா , முன் பள்ளி டிப்ளோமா போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
பல ஆண்டுகளாக உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அளவையியலும் விஞ்ஞான முறையும் பாடத்தை கற்பித்து பல மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி மாணவர்கள் மத்தியில் தளராத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கல்வியமைச்சின் கல்வி வெளியீட்டு திணைக்களத்தால் 2008, 2010 , 2015 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய பாட நூலாக்கப்பணியில் எழுத்தாளராகவும் , பதிப்பாசிரியருமாக பங்காற்றியுள்ளதுடன் தேசிய கல்வி நிறுவகத்தின் பிராந்திய நிலையங்களில் நடத்திவரும் கல்விமாணி சட்டக் கற்கை நெறியின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
பல கல்வி , கலைசார் , சிறுவர் ஆக்கங்களை நூல்களாக வெளியீடு செய்துள்ள இவர் கல்வியமைச்சு , கலாச்சார அலுவல்கள் அமைச்சு , தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு அமைச்சு , ஜனாதிபதி செயலகம் , லேக்ஹவுஸ்   போன்றவற்றால் நடாத்தப்பட்ட கட்டுரை ,பாடலாக்கம் , கவிதை , சிறுவர் கதைகள் என பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்று விருதுகளையும் , பணப்பரிசில்களையும் வென்றுள்ளார்.
இவருடைய சமூக , சமய அறநெறிச் சேவைகள் , கல்விச் சேவைகள் , சிறுவர்களுக்காக ஆற்றிய பணிகள் பாராட்டி அரச , அரச சார்பற்ற நிறுவனங்கள் கெளரவ பட்டங்களையும் விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளன.
கல்வியமைச்சு குரு பிரதீபா பிரபா விருதினையும் ,இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சும் , இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கலைச் சுடர் , தேசிய கலைஞர் விருதுகளையும் , தேசிய விஞ்ஞான மன்றம் ஐந்து நட்சத்திர விருதையும் , பட்டிருப்பு கல்வி வலயம் சாதனையாளர் விருதினையும் , அகில இன் நல்லுறவு ஒன்றியம் கலாநிதி, சாமசிறி வித்தியாசகர் பட்டங்களையும் , தேசிய சமாதான சங்கம் கல்வி சூரி , கீர்த்திசிறி தேசபந்து , இலங்கை சமாதான கற்கை நிலையம் சமாதான தூதுவர் , விஸ்வம் கெம்பஸ்  வாழ்நாள் சாதனையாளர் விருதினையும், தேசிய சமாதான நீதிவான்கள் பேரவை கீர்த்தி ஸ்ரீ விருதினையும் , மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையம் சமூகஜோதி விருதினையும் வழங்கி கெளரவித்துள்ளன.
திரு.நாராயணப்பிள்ளை நாகேந்திரன் தேசிய எழுத்தாளர் அமைப்பின் உறுப்பினராகவும் , மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையின் உப செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும் , மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நிருவாக சபை உறுப்பினராகவும் , அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் ,மண்முனை தென் எருவில்பற்று , களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவராகவும் , கோயில்போரதீவு தென்கண்ட கண்ணகி கமநல அமைப்பின் தலைவராகவும் பல சமூகப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

Post a Comment

0 Comments