(ரீ.எல்.ஜவ்பர்கான்)கொரோனா தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்டப்பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (30) ஆரம்பமாகின.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் சுகாதார வைத்தியதிகாரிகளான டாக்டர் ஈ.உதயகுமார், எஸ்.கிரிசுதன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் போது வைத்தியதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் பிராந்திய சுகாதரா சேவைகள் நிலைய ஊழியர்கள், வைத்தயசாலை ஊழியர்கள் ஆகியோர் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை ஏற்றி கொண்டனர்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைககள் தொடர்ந்தும் இடம்பெறுமென மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி ஈ.உதயகுமார் தெரிவித்தார்.
0 Comments