Advertisement

Responsive Advertisement

கல்முனை காணி பதிவகத்துக்கு பூட்டு! பதிவகத்துக்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள்!

 


அம்பாறை, காணிப் பதிவகத்தின் கல்முனைக் காரியாலயம் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.


காணிப் பதிவகத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, நேற்றிலிருந்து (28) 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கு கடமை புரிந்த ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என 25 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கல்முனை காணி பதிவகத்துக்கு கடந்த இரு வாரங்களுக்குள் சென்றவர்கள் சுயமாகவே தனிமைப்பட்டு கொள்ளுங்கள் எனவும் தங்கள் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகத்தரை தொடர்புகொள்ளுமாறும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments