மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 நிலையினைக் கருத்திற்கொண்டு இன்று 28.04.2021 திடீர் அன்டிஜன் பரிசோதனைகள் சுகாதாரத் துறையினரால் அரசடியில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 177 நபர்களின் மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகர்பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து வீதிகளில் முககவசம் அணியாது மோட்டர்சைக்கிள் மற்றும் வாகனங்களில் பிரயாணித்தவர்களை இன்று புதன்கிழமை (28) வழிமறித்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் வங்கி ஊழியர்கள்
பொலிஸார் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.
நாட்டில் மூன்றாவது அலையாக அதிகரித்துள்ள கொரோனா தொற்றினையடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரதுறையினர் இன்று நகர்பகுதியான அரசடி வீதிசுற்று வட்டத்திற்கு அருகில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் பொலிசாருக்கும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டு பரிசோதனைகள் இடம்பெற்றது.
இந்த நிலையில் அந்த பகுதி பிரதான வீதியால் மோட்டர்சைக்கிள் மற்றும் பஸ்வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பொலிஸார் பொதுசுகாதார உத்தியோகத்தர்கள் நிறுத்தி முககவசம் அணியாது பிரயாணித்தவர்களை நிறுத்தி 177 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையில் 3 வங்கி ஊழியர்களுக்கும் வங்கி ஊழியர் ஒருவரின் உறவினருக்கும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் ஒருவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Comments