Advertisement

Responsive Advertisement

வடமாகாணத்தில் கொரோனா பரவல் எந்நேரத்திலும் அதிகரிக்கலாம்- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


வடமாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தாலும், புத்தாண்டு தினத்திற்கு பின்னர் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை முழுவதும் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இனம் காணப்பட்டுள்ளனர் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.

ஆகவே வடமாகாணத்திலும் இது போன்று பரவல் அதிகரிக்க வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இருப்பினும் மக்களின் பயணங்களில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை, ஆகவே மக்களின் பயணங்கள் தடையின்றி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே எந்த நேரத்திலும் வடமாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தற்போது தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் இயலுமானவரை வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments