Advertisement

Responsive Advertisement

நேற்று மாத்திரம் 1466 பேருக்கு கொரோனா தொற்று- தொற்றுக்குள்ளானவர்களின் முழு விபரம் வெளியாகியது...!!


இலங்கையில் இன்று (29) காலை வரையில் 1466 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் - 19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 15 இலங்கையர்கள் உள்ளடங்குவர்.

ஏனைய 1,451 பேரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 228 ஆகும்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்திலிருந்து 209 பேர் மற்றும் குருநாகல் மாவட்டத்திலிருந்து 172 பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 842 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (29) காலை வரையிலான மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணி மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 99,688 ஆகும். இவர்களில் 93,683 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (29) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,952 பேர் என்பதுடன், அவர்களில் 95,083 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் இன்று காலை (29) வரையிலும் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 9,208 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று (29) காலை 6.00 மணி வரையிலான கடந்து 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 227 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (29) காலை வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மாவனல்ல, நிட்டம்புவ, பல்லேகம, வீரபொகுண, வத்தளை மற்றும் ஹாலிஹெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்படி, இன்று (29) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றைய (29) தினம் வரையிலும் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 113 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11,241 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இன்று (29) காலை வரையிலும் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தித்தவெல்கம, கும்புக்கெடே கிராம சேவகர் பிரிவு நிராவிய மற்றும் நிகதலுபொத ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமை படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments