Advertisement

Responsive Advertisement

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவனையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை

வாகனங்கள் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முழுமையாக தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி பாவிப்பதன் ஊடாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இதில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிறி கோதாகொட தெரிவித்துள்ளார் .
நேற்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு தொடர்பான சட்டதத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு உயர் நிதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்க எண்ணியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் இடம் பெற்ற மாநாட்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் நேற்று சட்டத்தரணிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கலாநிதி சிசிற ஜயகொடி தெரிவித்துள்ளார் .
வீதி சமிஞ்சை மற்றும் அது தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் எதிர் வரும் வாரம் அளவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கலாநிதி சிசிற ஜயகொடி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments