Advertisement

Responsive Advertisement

தொண்டமனாறு பகுதியில் இராணுவத்தினர் மணல் அகழ்வு

தொண்டமனாற்றின் நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்வதற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தொண்டமனாறிலிருந்து வல்லைவரை அணை கட்டப்பட்டு வருகின்றது.
இதற்காக ஆற்றிலிருந்து மண் அகழப்பட்டே குறித்த அணை கட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறு அகழப்படும் மண்ணினை கடந்த வியாழக்கிழமை இராணுவத்தினர் சீருடையில் சென்று மண் ஏற்றிச் சென்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை ஆறுதடவை மண் ஏற்றிய இராணுவத்தினர் மீண்டும் வெள்ளிக்கிழமை இரண்டு தடவைகள் மண் ஏற்றிச் சென்றதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இராணுவத்தினர் தமது சீருடையுடன் வந்து தம்மிடம் அனுமதிபெற்றே மண்ணை ஏற்றிச் சென்றார்கள் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments