இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காணப்படுகின்றது. மூவினங்களும் ஒன்றிணைந்து எவ்வாறு இந்த திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவே நாங்கள் இங்கு கலந்துரையாடியுள்ளோம்.
கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையிலான திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாகாணசபையுடன் இணைந்து மேலதிக அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்கின்றோம்.அதனை எவ்வாறு குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
கதைத்து கதைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர எதுவித முன்னேற்றத்தினையும் நாங்கள் காணமுடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். குறைந்தபட்சம் எதனையாவது செய்துள்ளோமா என்பதையாவது காட்டவேண்டும்.
யுத்தின் பின்னர் வட,கிழக்குக்கு பெருமளவான நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவது நாங்கள் ஆய்வுசெய்து அதனைக்கையாள வேண்டும்.சர்வதேசத்தின் ஊடாக அந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும். அதேபோன்று திருகோணமலையில் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. சில கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பாரிய அபிவிருத்திகள் வெளிநாடுகளினால் நடாத்தப்படுகின்றது.
மட்டக்களப்பில் உள்ள விமான நிலையத்தினை இலங்கையில் உள்ள ஏனைய விமான நிலையங்களுடன் ஒருங்கிணைத்து அதன் மூலம் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம். குறைந்த நேரத்தில் மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு வந்து செல்லமுடியும். அதேபோன்று பாதை புனரமைப்புக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
காடுகளை பாதுகாத்து சுற்றுலாத்துறையினை ஈர்க்கும் இடங்களாக மாற்றுவதன் மூலமும் எமது வளங்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்றுவதன் மூலமும் நாங்கள் இப்பகுதிகளை அபிவிருத்தி செய்யமுடியும். எமது வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்தப்படுமானால் எமது பகுதிகளில் உள்ள வாழ்வாதார பிரச்சினைகள் குறைவடையும். அதற்கான உதவிகளை அரசாங்கமும் வழங்கும்.
சுற்றுலாத்துறை மூலம் மீன்பிடித்துறையினை அபிவிருத்தி செய்வதற்கும் மீன்பிடியாளர்களின் வளத்தினை அதிகரிப்பதற்கும் பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியும். தனிப்பட்டவர்களின் காணிகளை அவர்களுக்கு வழங்கவேண்டும். அபகரிக்கப்பட்ட நிலங்களை நாங்கள் மீண்டும் மீட்கவேண்டும்.
இந்த அபிவிருத்திட்டங்களை மாகாண,மாவட்ட.பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதனை சிலர் எவ்வாறு செய்வது என கேட்கின்றனர். இதனை சவாலாக எடுத்து செய்துபார்க்கவேண்டிய தேவையுள்ளது. குறுகிய காலத்திற்குள் தீர்மானிக்கப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதில்லையென கூறுகின்றனர். அதனை செய்துபார்ப்போம். யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கிய சென்று கொண்டிருக்கின்றோம் என அங்கு மேலும் தெரிவித்தார்.
|
0 Comments