குழாய் மூலமான தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தக் கூடியதாக சென்சர் முறையிலான குழாய் மாதிரி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தில் உள்ள 50 பாடசாலைகளுக்குப் பொருத்தத் தீர்மானித்துள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்தது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களால் இவற்றை உருவாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் வறட்சியான கால நிலையால் குழாய் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடியவாறு சென்சர் முறையில் அவை அமைக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் குழாய் மாதிரி அமைப்பை வடிவமைத்துள்ளனர். இதற்கான அறிமுகநிகழ்வு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தத் திட்டம் பயனளிக்கக் கூடிய வகையில் அமையும் என்ற நோக்கில், முதற்கட்டமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ள 50 பாடசாலைகளில் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வித் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்.
0 Comments