Advertisement

Responsive Advertisement

1095 கோடி ரூபாவை கொள்ளையிட்ட தேரர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை தம்புள்ளை ரன்கிரி விகாரையின் முன்னாள் பொறுப்பாளர் இனாமலுவே சுமங்கள தேரர் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள ரன்கிரி விகாரையின் தற்போதைய பொறுப்பாளர் கொடகம மங்கள தேரர் இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தள்ளார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விகாரைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை முன்னாள் பொறுப்பாளர்,
மத்திய கலாச்சார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் தம்புள்ளை விகாரையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றில் வைப்புச் செய்யாது அந்த பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக மங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிதி கொள்ளை சம்பந்தமாக துரிதமாக கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்துமாறும் மங்கள தேரர், அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

Post a Comment

0 Comments