மகிந்த ராஜபக்ச அரசு பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், பன்னாட்டு அரங்கிலிருந்து மனித உரிமைப் பிரச்சினை, பெரும் கடன்சுமை, ஊழல் மோசடி, குப்பைப் பிரச்சினை எனப் பல்வேறு குப்பைமேடுகளைச் சுமக்க வேண்டி ஏற்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.
ராஜபக்ச குடும்பத்தில் வீடு வாங்கியமை, கறுப்புப் பணப் புழக்கமென 3.1 பில்லியன் ரூபா பெறுமதியான மோசடி குறித்த தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிதி தொடர்பான விவரங்களைப் பெறமுடியாதுள்ளது.
நாட்டின் கடன்சுமைகளுக்காக இந்த வருடத்தில் அரசு 2,085 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது. இதில் 72 வீதம் கடந்த அரசின் காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான கொடுப்பனவாகும்.
2019ஆம் ஆண்டாகும்போது வருடத்துக்கான கடன் மீள் கொடுப்பனவுக்காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
2019ஆம் ஆண்டாகும்போது வருடத்துக்கான கடன் மீள் கொடுப்பனவுக்காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
இதில் 82 வீதமானது கடந்த அரசின் காலத்தில் பெறப்பட்டதாகும். இது வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும். 2020 ஆம் ஆண்டாகும் போது 3752 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். 2022 ஆம் ஆண்டு தலையைத் தூக்க முடியதளவுக்குக் கடன் பெறப்பட்டுள்ளது.
பன்னாட்டு நாணய நிதியம் எமது நிதி நிலைமைகளின் பலத்தை அறிந்து உதவி வருகிறது. இவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டுச் செலாவணியைத் தாராளமயப்படுத்தும் வகையிலான சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.இதனூடாக வெளிநாட்டு மூலதன முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
0 Comments