தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் என்ற தலைப்பில் வவுனியா சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா வாடி வீட்டில் நேற்று இந்நிகழ்வு இடம்பெற்றது.
அரசியல்வாதிகள் சார்பில் வன்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன், எம். தியாகராஜா ஆகியோரும் அரசியல் ஆய்வாளர்கள் நிலாந்தன், சி.அ.யோதிலிங்கம் கலந்து கொண்டதுடன் மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டாளர் எஸ். சிவகரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சமகால அரசியல நிலமைகள் தெர்பாக ஆராயப்பட்டதுடன் தமிழரசுக் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தது.


0 Comments