Advertisement

Responsive Advertisement

பொலிஸ் அதிகாரிகள் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு! யாழ். விரைந்த பொலிஸ்மா அதிபர்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திடீர் விஜயமாக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அங்கு பாதுகாப்பு மிகவும் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments