Advertisement

Responsive Advertisement

இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த ஆசிய நோபல் பரிசு!

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருது 82 வயது இலங்கைத் தமிழ் பெண்மணியான கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்சின் புகழ்பெற்ற அதிபரான ராமன் மக்சாசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது இலங்கைத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கெத்சி சண்முகம் இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments