இலங்கை இந்திய அணிகளிற்கு இடையில் மூன்றாம் திகதி கொழும்பு எஸ்எஸ் சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்டில் தினேஸ் சந்திமல் விளையாடுவார் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார். சந்திமல் விளையாடுவார் என நினைக்கிறேன் அவர் கடந்த இரண்டு நாட்களாக துடுப்பெடுத்தாடி வருகின்றார் என அசங்ககுருசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை ரங்கன ஹேரத்தின் கைகாயம் குறித்து அணி நிர்வாகம் அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அவரது கைகாயம் இன்னமும் முழுமையாக ஆறவில்லை இறுதி நிமிடம் வரை நாங்கள் அவரிற்கு வாய்ப்பை வழங்குவோம் என அசங்க குருசி;ங்க தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிக்கு முதல்நாள் நாங்கள் அவரால் வலியின்றி பந்து வீச முடியுமா என்பதை அவதானிப்போம் அவரது கைவிரலில் வலி தொடர்ந்தும் நீடித்தால் வேறு மாற்றங்கள் குறித்து சிந்தி;க்கவேண்டியிருக்கும் என குருசிங்க தெரிவித்துள்ளார்.
0 Comments