16-05-2024
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்றைய தினம் நிறைவடைந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments: