Advertisement

Responsive Advertisement

பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து வானுக்கு தீவைத்த வாள்வெட்டுக் குழுவினர்!

கொக்குவிலில் நேற்று பட்டப்பகலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றனர். கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து நின்ற வானின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தியதுடன், அதன் முன் பக்கத்தில் தீவைத்துள்ளது. அத்துடன், வீட்டுக்குள் இருந்த பெறுமதியான பொருள்களையும் அந்தக் கும்பல் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்துக்குள் 8 பேர் கொண்ட ஒரே கும்பலால் கொக்குவில், ஆனைக்கோட்டை மற்றும் வண்ணார்பண்ணை உள்ளிட்ட 5 இடங்களில் வவன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
   

Post a Comment

0 Comments