Home » » பகிடிவதைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை

பகிடிவதைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை


பகிடிவதைக்கு எதிரான சட்டதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பகிடிவதைகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சகல பொலிஸ் நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவித்ததாவது

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு நீதவான் நீதிமன்றத்தில் பிணைவழங்குவதற்கும் சட்டத்தில் இடமில்லை. குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும். பகிடிவதைக்கு எதிரான சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் பிள்ளைகள் என்ன செய்கின்றனர்? பல்கலைக்கழகம் முடிவடைந்து வீடு திரும்புவதற்கு ஏன் தாமதம் அடைகிறது என்ற விடயங்களில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

‘ஆபிரிக்காவின் பழங்குடி இன மக்களிடையே கூட இடம்பெறாத சம்பவங்கள் இலங்கை பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பகிடிவதைகளின் போது இடம்பெறுகின்றன. பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பகிடிவதைகளுக்கு அஞ்சி பல்;கலைக்கழக கல்வியை நடுவிலேயே விட்டுவிடுகின்றனர். பல தற்கொலைகளும் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சப்ரகமுவவிலிருந்து போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களிடம் தகவல்களைப் பெற முடிந்தது. அதற்கமைய ஆறு பஸ்களில் மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஏழு தடைவகள் மாணவர்கள் அவ்வாறு வந்து சென்றுள்ளனர். அதற்காக 2.1 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத அப்பாவி மாணவர்கள் வீணாக தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்கின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தைப் பேண முடியாவிட்டால் அங்கு நிர்வாகம் செய்வது மிகவும் கஷ்டமான விடயமாகும். இவ்வாறான குழப்ப நிலையை ஏற்படுத்துவதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றன. குறிப்பாக வங்குரோத்து நிலையை அடைந்துள்ள குழுவொன்று செயற்படுகிறது. அது மாத்திரமன்றி அப்பாவி மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் பணத்தை செலவுசெய்ய வைக்கும் நோக்கில் செயற்படும் குழுவொன்றும் உள்ளது.

புதிய மாணவர் அணியொன்று பல்கலைக்கழகத்துக்கு நுழைய முன்னர் அதில் நுழையவிருக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளை பல்கலைக்கழம் தொடங்க முன்னரே வகுப்புக்களுக்கு இணைத்துக் கொள்கின்றனர். இவர்களைக் கொண்டு பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கும் திட்டங்கள் மேற்கெபள்ளப்படுகின்றன ‘சேப் ஹவுஸ்’ களில் மிகவும் மோசமான வகையில் பகிடிவதைகளை இடம்பெறுகின்றன என்றும் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |