Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொத்துவில் பசறிச்சேனை கிராமத்தில் யானை உட்புகுந்து அட்டகாசம்

செ.துஜியந்தன்



பொத்துவில் பசறிச்சேனை(பெரிய உல்லை) பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3மணியளவில் யானைகள் கூட்டமாக  கிராமத்திற்குள்  உட்புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
அதிகாலை வேளையிலே பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் பிளிறல் சத்தத்துடன் உள் நுழைந்துள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

உள் நுழைந்த யானைகள் அங்கு மக்களால் பயிரிடப்பட்டிருந்த பயிர்ச்செய்கைகளையும், பயனுள்ள தென்னை மரங்களையும் துவம்சம் செய்துள்ளன. கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை விரட்டும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்கள். பொத்துவில் பசறிச்சேனை கிராமத்திற்குள் நுழையும் காட்டுயானைகளை விரட்டுவதற்க்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments