செ.துஜியந்தன்
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினாப்போட்டியில் கலந்து கொண்ட பாண்டிருப்பைச்சேர்ந்த விஸ்வலிங்கம் சஞ்ஜய் அங்கு நடைபெற்ற போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கத்தினை சூவிகரித்துக் கொண்டார்.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்விபயிலும் மாணவன் சஞ்ஜய் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட சர்வதேச கணித வினாப்போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று சிங்கப்பூரில் நடைபெறும் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் கடந்த 26 ஆம் திகதி சிங்கப்பூர் சென்ற மாணவன் விஸ்வலிங்கம் சஞ்ஜய் நேற்று(29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணித வினாப்போட்டியில் 16 நாடுகளில் இருந்து வருகை தந்த மாணவர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கத்தினை சூவிகரித்துக் கொண்டார். மாணவன் சஞ்ஜயின் தந்தை விஸ்வலிங்கம் கணித ஆசிரியர் என்ப
0 Comments