இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , (தேசிய பாடசாலை ), களுவாஞ்சிகுடி மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்றினை மக்கள் வங்கியின் களுவாஞ்சிகுடி கிளை , கிளை முகாமையாளர் என்.மதன சாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று ( 27) இடம்பெற்றது.
இப்பாடசாலையிலிருந்து 122 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 114 மாணவர்கள் 70 க்கு மேல் புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன் வெட்டுப் புள்ளிக்கு மேல் 30 மாணவர்கள் பெற்று புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையைச் சேர்ந்த பழனித்தம்பி பவுஸ்தினி எனும் மாணவி 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் நிலையிலும் , கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது இடத்தினையும் பெற்று சாதனையை ஏற்படுதியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் , ஆசிரியர்கள், வங்கி உத்தியோஸ்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments: