Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாஸ எங்கே?

சமகால அரசியல் செயற்பாடுகளில் இருந்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ விலகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கிய கட்சித் தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானமிக்க கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் சஜித் பிரேமதாஸ வராமையினால் அது இரத்துச் செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்துகொள்ளவிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கும் ரணில் விக்ரமசிங்க மறுப்பு தெரிவித்துள்ளதுடன், கட்சியின் தலைவராக தொடர்ந்து செயற்பட போவதாக அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக விரக்தியடைந்த சஜித் அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுக்கியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
பலத்த சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாஸ கலந்துரையாடல்களை புறக்கணித்தமையினால் இந்த முடிவு சபாநாயகரினால் எட்டப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments