Advertisement

Responsive Advertisement

யாழ் மாநகரசபைக் கூட்டுக் குலைந்தது!!



யாழ்ப்பாண மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் 28.11.2019 ஈபிடிபி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரகசிய ஒப்பந்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.மேலும் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு மறைமுக ஆதரவாக புளெட்டும் வேறு சில உறுப்பினர்களும் சாணக்கியமாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளமல் தவிர்த்துக் கொண்டனர். 

ஐக்கிய தேசியக் கட்சியின் வட,கிழக்கு பிராந்திய கட்சியாக திகழும் தமிழரசுக் கட்சி கடந்த உள்ளுராட்சி தேர்தலிலிருந்து,ஐக்கிய தேசியக் கட்சி,ஈபிடிபி,முஸ்லீம்காங்கிரஸ்,சுதந்திரக் கட்சி,பொதுஜனபெரமுன,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து வடக்கு கிழக்கிலே 39 உள்ளுராட்சி மன்றங்களை தமிழரசுக் கட்சி தலைமையில் கூட்டாட்சி செய்து வருகின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் எதிரொலிதான் யாழ் மாநாகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு பிரதான காரணமாகும்.இது தமிழரசுக் கட்சிக்கு விழுந்த இரண்டாவது அடியாகும்.

உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்படி இரண்டு வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டாலும் சபை தவிசாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் தோற்கடிக்கபட்ட வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்பது நியதி. ஆனால் இதற்கு பின்பாக சபை தவிசாளருக்கு எதிராக சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பாண்மையால் நிறைவேற்றப்பட்டால் சபை தலைவர் பதவியை இழக்க நேரிடும்.இவ்விடயம் தமிழரசுக் கட்சி ஆட்சி செய்யும் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களிற்கும் பாரிய சவாலாக அமையப்போகின்றது.

இவ்வாறாக மாநகர முதல்வர் ஆர்னோல்டுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேணை கொண்டுவரப்பட்டு அவர் பதவியிழந்த பின்பு ஈபிடிபியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்த ஓர் ஆட்சியே யாழ் மாநகரசபையில் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.மேலும் ஏற்கனவே யாழ் மாநகர சபை ஆட்சி அமைப்பதற்காக முன்னணியினர் ஈபிடிபியின் ஆதரவை கோரியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல வருடகாலமாக தமிழ்த் தேசியம் பேசிவந்த தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈபிடிபி கட்சியுடன் வெளிப்படையானதும் மறைமுகமானதுமான உறவை வைத்திருந்தது யாழ் மாநகரசபை வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அம்பலத்திற்கு வந்தள்ளது இது இவ்விரண்டு கட்சிகளினுடைய கொள்கை வழியிற்ற சுயலாப கட்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என வெளிப்டையாக தெரியவருகிறது.

Post a Comment

0 Comments