மட்டக்களப்பு- காஞ்சரம்குடா, வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் வெடிகுண்டு பிரிவினர் வெடிக்க வைத்துள்ளனர்.
இன்று குறித்த கைக்குண்டுகளை மீட்ட படையினர், அப்பகுதியில் வெடிக்கவைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர் .
கொக்கட்டிச்சோலை - வேக்கந்தசேனை வயல் பகுதிக்கு அருகில் மண்மேடு ஒன்றில் கைக் குண்டுகள் இருந்ததை கண்ட விவசாயிகள் பொலிஸர் அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர், கைவிடப்பட்ட கைக்குண்டுகளை பார்வையிட்டனர்.
பின்னர் அதனை வெடிக்க வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்று, 24 கைக்குண்டுகளை மீட்டு உடனடியாக வெடிக்க வைத்துள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அவர்களால் இந்த கைக்குண்டுகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருக்க கூடுமென சந்தேகிப்பதுடன் தற்போது பெய்துவரும் கனமழையினால் மண் அரிக்கப்பட்டு இந்த குண்டுகள் வெளியே தென்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments