கட்சித் தாவலை எதிர்த்த காரணத்தினால் தேசிய அரசாங்கம் அமைக்கத் தீர்மானித்தோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து பேரை இணைத்துக்கொண்டு ஏன் அரசாங்கம் அமைக்க முடியாது என சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
கட்சித் தாவல் தடை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்த காரணத்தினால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளவில்லை.
கட்சித் தாவும் உறுப்பினர்களை ஏற்றுக்கொண்டால் மக்கள் எம்மீது குற்றம் சுமத்துவார்கள்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை.
தேசிய அரசாங்கமொன்றை அமைத்து அமைச்சர்களை நியமிப்பது குறித்த யோசனை செப்டம்பர் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகள் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவார்.
அதன் பின்னர் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 3ம் திகதி அமைச்சரவை எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் - ரணில்
இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதியன்று அமைச்சரவையின் எண்ணிக்கை குறித்து தீர்மானிக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 19வது திருத்தத்தின் கீழ் அமைச்சரவை உறுப்பினர் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியன்று சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோர் தெரிவு செய்யப்படுவர். இதனையடுத்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்
0 Comments