Advertisement

Responsive Advertisement

வெள்ளவத்தையில் தொடருந்தில் மோதி மட்டக்களப்பு இளைஞர் பலி

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தொடருந்தில் மோதி மட்டக்களப்பு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மட்டக்களப்பு - தொடருந்து நிலைய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோசன் என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்தார்.

மரதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த தொடர்ந்தில் மோதி படுகாயமடைந்த அவர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிவலிங்கம் நிரோசன் மட்டக்களப்பில் இருந்து வெளியான பல்வேறு கலைப்படைப்புகளின் பின்னணியில் செயற்பட்டுள்ளதுடன், பல குறுந்திரைப்படங்களையும் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments