புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான ஆலோசனை பெறும் செயற்பாடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுக்குள் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக பிரதமர் கூறி இருந்தார்.
இதன் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக புத்திஜீவிகள் மற்றும் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இதன்படி தம்மிடமும் இது தொடர்பான ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
0 Comments