தலைவர் பிரபாகரனை ராணுவம் கைது செய்து பின்னர் கொன்றது என்று ஊடகங்களுக்கு கூறிவந்தார் கருணா. இந்தக் கூற்று தமிழர்கள் மத்தியில் அவரை அவருவருக்கத் தக்க மனிதராக காட்டியது. ஆனால் சிங்களப் பகுதியில் கோட்டபாய மற்றும் ராஜபக்ஷர்களுக்கு பெரும் செல்வாக்கை தேடித்தந்து இவர் கூற்று. தற்போது ராஜபக்ஷர்களின் ஆதரவை முற்றாக இழந்து நடுத் தெருவில் தவிக்கும் கருணாவை , பயன்படுத்திக்கொள்ள மீடியாக்கள் தவறவில்லை. இப்போது கேட்டால் ஆதங்கத்தில் சில விடையங்களை இவர் நிச்சயம் உளறுவார் என்று மீடியாக்கள் கணக்குப் போட்டு அவரை நான் நீ என்று போட்டி போட்டு நேர்காணல் எடுக்கிறார்கள்.
சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக் காட்சிக்கு கருணா கொடுத்த பேட்டியில், ஒரு அந்தர் பெல்டி அடித்தார் கருணா. தலைவர் பிரபாகரன் தன்னை தானே சுட்டுக்கொன்று இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். அப்படி என்றால் ராணுவம் அவரைக் கொல்லவில்லையா? என்று சிங்களவர் மத்தியில் மீண்டும் குழப்பம் எழுந்துள்ளது. அப்படி என்றால் ராஜபக்ஷர்கள் சொன்னது பொய்யா? என்ற சந்தேகமும் எழுகிறது அல்லவா? இது சிங்கள மீடியாக்களில் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இதனை அடுத்து கோட்டபாய கருணாவை தொடர்புகொண்டு கெட்டவார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார். எனக்கு ஒரு சீட்டு தாருங்கள் என்று கேட்டபோது எவரும் எனது தொலைபேசி அழைப்பை எடுக்க வில்லை. ஆனால் இப்போது ஓடி வருகிறார்கள் பார்த்தீர்களா? என்று கருணா தனது நெருங்கிய சகா ஒருவருக்கு உளறியுள்ளார்.
முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு , தான் கூறுவதில் எதிலும் உண்மை இல்லை என்பதனை கருணா ஒருவாறு நிரூபித்துள்ளார். அவருக்கும் புலிகள் மேலும் ஆத்திரம் தற்போது ராஜபக்ஷர்கள் மேலும் ஆத்திரம். இதனால் எதனைக் கூறினாலும் இரண்டிற்கும் எதிராக கருத்தையே வெளியிடுகிறார். மகிந்தவோடு ஒட்டி உறவாடிய வேளை , யாழ் நாவற்குழியில் உள்ள இரால் வளர்ப்பு நிலையம் ஒன்றை வளைத்துப் போட்ட கருணா அதனூடாக ஏற்றுமதி லைசன்ஸ் ஒன்றை எடுத்து இராலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் பணத்தை சம்பாதித்தார். அவரது மனைவி கருணாவின் பெண்கள் சகவாசம் பிடிக்காமல் ஒதுங்கி வந்து ஸ்காட்லான்டில் வாழ்ந்து வருகிறார். தற்போது மனைவியோடு இணைந்து ஸ்காட்லாந்தில் வாழலாமா என்று கருணா எண்ணி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கு ரணில் ஒத்துக்கொள்ள வேண்டுமே ... கருணா அல்லது கே.பி போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அது தற்போதைய அரசாங்கத்திற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்.... இவர் திண்டாடுகிறார்.
0 Comments