வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் 28,29 ஆம் திகதிகளில் இரண்டு வேவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம்பற்றி தெரியவருவதாவது மண்டூர் முருகனாலய உற்சவகாலம் ,போயா தினங்களில் தனிநபர் வீடு மற்றும் ஆலய வளாகத்திலும் சட்டவிரோதமான முறையில் பியர்,மதுபானப்போத்தல்களை விற்பனை செய்வதாக பொலிசாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தினை சுற்றிவளைத்தபோது விற்பனை செய்த நபர் மற்றும் மதுபானப்போத்தல்களை கைப்பற்றியுள்ளதாகவும்.பின்னர் பொலிசாரின் பிணையில் இருவரும் விடுவிற்கப்பட்டதாகவும் இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது 31 திங்கல் இவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்படவுள்ளதாகவும் வெல்லாவெளிப்பொலிசார் தெரிவித்துள்ளனர்.
0 Comments