Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வாழைச்சேனையில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கொண்டுசென்றவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமாக மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும் சந்தேக நபர் ஒருவரும் இன்று(26) அதிகாலை கைது செய்யப்பட்டள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டுவரப்பட இருந்த நிலையில் இன்று(26) அதிகாலை வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதுரை மற்றும் பாலைபாலை மரங்கள் இருபத்தி நான்கு மற்றும் மரக்குற்றிகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

                  

Post a Comment

0 Comments