Home » » மண்முனையில் குடியேற்றங்களை நிறுத்தி புனித பிரதேசமாக்க கோரிக்கை

மண்முனையில் குடியேற்றங்களை நிறுத்தி புனித பிரதேசமாக்க கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனையில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தி புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'மட்டக்களப்பு, மண்முனையில் உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்ற போதும், இன்னும் அப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன், குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலை நாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப் பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
'மஹிந்த சிந்தனை' மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லையா என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக காணப்படும் புரதான பொருட்களையும் இடங்களையும் பேணிப் பாதுகாப்பது என்ற உயரிய சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்தில் மாத்திரம் பேணப்படாமல் இருப்பது ஏன் என்கின்ற ஐயப்பாடு எமக்கு தோன்றுகின்றது.
அதிகாரிகளின் தாமதமா அல்லது அரசியல்வாதிகளின் அழுத்தமா என்பதனை தற்போது வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை அரசாங்க அதிபராகிய தாங்களே தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை கோரி நிற்கின்றேன்.
சுமார் கி.பி. 312ஆம் நூற்றாண்டில் இந்திய ஒரிஷா மாநிலத்தில் இருந்து புத்த தாதுவினையும் சிவலிங்கத்தினையும் கொண்டு வந்த சிற்றரசி உலக நாச்சியும் அவரது சகோதரரும் பொலன்னறுவையில் புத்த தாதுவினை கொடுத்து விட்டு தனது பரிபாரங்களுடன் ஆரையம்பதி சிகரம் பகுதியில் காடு வெட்டி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தினையும் அமைத்து பூஜை புரிந்து வந்த வேளையில் கொக்கட்டிசோலையில் கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் வெளிவரவே அங்கு விஜயம் செய்து கொக்கட்டிச்சோலை  ஸ்ரீதான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்தில் பந்தலிட்டு வருடா வருடம் பூஜை புரிந்து வாழ்ந்து வந்ததோடு வருடாந்த உற்சவங்களுக்காக கி.பி. 312ஆம் நூற்றாண்டு அளவில் தன்னால் அமைக்கப்பட்ட ஆரையம்பதி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூஜைப் பொருட்களையும் திருசூலத்தினையும் கொண்டு செல்வதனை வழக்கமாக்கியும் இருந்தார்.
இந்த நடைமுறை இதுவரையும் உள்ளது. அதாவது காசிலிங்கேஸ்வரர் ஆலயம் போத்துக்கீசர் படையெடுப்பில் உள்ளடக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்திற்கு திருசூலம் எடுத்துச் செல்வதும் வடம் புஸ்ரீட்டுவதும் ஓர் சம்பிரதாயமாக நடைபெற்று வருகின்றது.

இவை போன்ற பல ஆதாரங்களை சுட்டிக்காட்டிய போதும் இதுவரை இப்பகுதியினை அகழ்வாராட்சி செய்யவோ, புராதான இடமாக பிரகடனப்படுத்தவோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் எம்மால் உணர முடியவில்லை என்பதனை மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்றபோதும், இன்னும் இப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன் 1988ஆம் 1989ஆம் வருடப் பகுதியில் குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலைநாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப்பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.  
மேலும், கடந்த 29.11.2013 என்று திகதியிடப்பட்ட ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் பொது அமைப்புகள்; சார்பாக தங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்டுகின்றேன். எமக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனையில் இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்தி புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'மட்டக்களப்பு, மண்முனையில் உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்ற போதும், இன்னும் அப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன், குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலை நாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப் பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
'மஹிந்த சிந்தனை' மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்திற்கு மாத்திரம் இல்லையா என்ற ஐயப்பாடு தோன்றுகின்றது.   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக காணப்படும் புரதான பொருட்களையும் இடங்களையும் பேணிப் பாதுகாப்பது என்ற உயரிய சிந்தனை மண்முனைப்பற்று, ஆரையம்பதி  பிரதேசத்தில் மாத்திரம் பேணப்படாமல் இருப்பது ஏன் என்கின்ற ஐயப்பாடு எமக்கு தோன்றுகின்றது.
அதிகாரிகளின் தாமதமா அல்லது அரசியல்வாதிகளின் அழுத்தமா என்பதனை தற்போது வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை அரசாங்க அதிபராகிய தாங்களே தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை கோரி நிற்கின்றேன்.
சுமார் கி.பி. 312ஆம் நூற்றாண்டில் இந்திய ஒரிஷா மாநிலத்தில் இருந்து புத்த தாதுவினையும் சிவலிங்கத்தினையும் கொண்டு வந்த சிற்றரசி உலக நாச்சியும் அவரது சகோதரரும் பொலன்னறுவையில் புத்த தாதுவினை கொடுத்து விட்டு தனது பரிபாரங்களுடன் ஆரையம்பதி சிகரம் பகுதியில் காடு வெட்டி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தினையும் அமைத்து பூஜை புரிந்து வந்த வேளையில் கொக்கட்டிசோலையில் கொக்கட்டி மரத்தில் இருந்து இரத்தம் வெளிவரவே அங்கு விஜயம் செய்து கொக்கட்டிச்சோலை  ஸ்ரீதான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்தில் பந்தலிட்டு வருடா வருடம் பூஜை புரிந்து வாழ்ந்து வந்ததோடு வருடாந்த உற்சவங்களுக்காக கி.பி. 312ஆம் நூற்றாண்டு அளவில் தன்னால் அமைக்கப்பட்ட ஆரையம்பதி காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பூஜைப் பொருட்களையும் திருசூலத்தினையும் கொண்டு செல்வதனை வழக்கமாக்கியும் இருந்தார்.
இந்த நடைமுறை இதுவரையும் உள்ளது. அதாவது காசிலிங்கேஸ்வரர் ஆலயம் போத்துக்கீசர் படையெடுப்பில் உள்ளடக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரையம்பதி ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர்  ஆலயத்திற்கு திருசூலம் எடுத்துச் செல்வதும் வடம் புஸ்ரீட்டுவதும் ஓர் சம்பிரதாயமாக நடைபெற்று வருகின்றது.

இவை போன்ற பல ஆதாரங்களை சுட்டிக்காட்டிய போதும் இதுவரை இப்பகுதியினை அகழ்வாராட்சி செய்யவோ, புராதான இடமாக பிரகடனப்படுத்தவோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போல் எம்மால் உணர முடியவில்லை என்பதனை மன வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த உலகநாச்சியின் கோட்டையாக இருந்த இடமும் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த இடமும் அதனைச் சூழ காணப்பட்ட கோவிலுக்குரிய  குளமும் இன்று அரச காணியாகவும் உரிமை கோரப்பட்ட காணியாகவும் காணப்படுகின்றபோதும், இன்னும் இப்பகுதியில் துரித குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தடுத்து புராதான சிறப்பு மிக்க உலக நாச்சியின் கோட்டை இருந்த பகுதியினையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றாக அமைந்த காசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராட்சி செய்வதுடன் 1988ஆம் 1989ஆம் வருடப் பகுதியில் குறித்த இடத்தில் அகழ்வு செய்து பெறப்பட்ட சிவலிங்கம் மற்றும் ஐந்து தலைநாகம் குடையின் கீழ் அமைந்துள்ள திருவுருவச்சிலை மணி உள்ளீட்ட புராதான பொருட்களையும் ஆராய்ந்து அப்பிரதேசத்தினை புராதன புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.  
மேலும், கடந்த 29.11.2013 என்று திகதியிடப்பட்ட ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் பொது அமைப்புகள்; சார்பாக தங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்டுகின்றேன். எமக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |