மட்டக்களப்பு தாண்டவன்வெளி ரெலிகொம் சந்தியில் இன்று வெள்ளி (25) மாலை இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹமட் நஸீர் வயது (24) கால உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து சிறு உழவுஇயந்திரத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டியுடனும் மோதியதினாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments