மட்டக்களப்பு மாநகர சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்ட "பாட்டாளிபுரம்" விளையாட்டு மைதான திறப்பு விழாவும் சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு சிறப்பு விளையாட்டு விழாவும் நாளை (26) சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் காலை 9.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளின் ஆரம்ப வைபவமாக மரதன் ஓட்டமானது காலை 6.00 மணிக்கு காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமாவதுடன், அடுத்து மைதான திறப்பு விழாவும் ஏனைய நிகழ்வுகளும் காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகும்.
மலை நேர நிகழ்வாக பி.ப 2.00 மணி தொடக்கம் பாரம்பரிய வினோத விளையாட்டு நிகழ்வுகள் மாநகர சபையின் உத்தியோகத்தர்களுக்கென இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நலன்விரும்பிகள், விளையாட்டு ரசிகர்களென அனைவரையும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு மாநகர ஆணையாளர் அழைப்பு விடுக்கின்றார்.
0 Comments