குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகமும் இளைஞர் கழகமும் வருடா வருடம் இணைந்து நடாத்தும் புதுவருட கலாசார விழா இம்முறையும் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது 26.04.2014 அன்று சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் இ.மதன் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலாநிதி திரு.மூ.கோபாலரெத்தினம் (பிரதேச செயலாளர் ம.தெ.எ.ப.) அவர்கள், சிறப்பு அதிதிகளாக திரு.மா.உலககேஸ்பரம், (பிரதிக் கல்விப் பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம்) அவர்கள், திருமதி வசந்தகுமாரன் (செயலாளர் பிரதேச சபை ம.தெ.எ.ப.) அவர்கள், விசேட அதிதிகளாக திரு.கே. தர்மலிங்கம் (அதிபர், மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி) அவர்கள், இராணுவ பொறுப்பதிகாரிகள், குருக்கள்மடம், அத்தோடு இன்னும் பல கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வுகளாக
1. மரதன் ஓட்டம் (15 வயது மேல் ஆண் )
2. மரதன் (13 - 15 வயது ஆண்கள்)
3. சறுக்குமரம் ஏறுதல்
4. முட்டி உடைத்தல் (15 வயது மேல் ஆண் )
5. சமநிலை ஓட்டம்
6. தலையணை அடித்தல்
7. கிடுகுபின்னல்
8. போத்தலில் நீர் நிரப்புதல்
9. தடைதாண்டி ஓட்டம்
10. சங்கீத சைக்கிள் சவாரி
11. கயிறு இழுத்தல்
12. கலப்பு அஞ்சல்
13. விநோத உடை
14. சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம்
15. பலூன் ஊதி உடைத்தல்
16. பூனைக்கு வால் வைத்தல்
0 Comments