Home » » ஏழு பேர் விடுதலையில் திடீர் திருப்பம்! இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

ஏழு பேர் விடுதலையில் திடீர் திருப்பம்! இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
perarivalan- murugan- santhan- nalini
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. இதில், அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27 ஆம் தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும், 5 அல்லது 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் கொண்ட இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதாகவும், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மீதான தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |