Advertisement

Responsive Advertisement

அட்டாளைச்சேனைப் பகுதியில் பெண் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு! நால்வர் கைது!!

பெண் ஒருவரை அட்டாளைச்சேனை சம்புநகர் பகுதியில் இன்று (29) கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த பெண் வயல் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த சந்தேக நபர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் அறிந்த அக்கரைப்பற்று பெருங் குற்றப் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட 42 வயதுடைய பெண் கூலித்தொழில் நிமித்தம் மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து அட்டாளைச்சேனை சம்பு நகர் பிரதேசத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்து வேறொரு பெண்ணின் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அக்கரைப்பற்று பொலிஸார் சந்தேக நபர்கள் நால்வரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments