கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட 14 பேர் மது போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது இதை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் உள்ள அடுக்குமாடி தொடரில் வசிப்பவர்கள் கொரோனா தொற்று தொடர்பில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா அபாயவலயமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும் கொழும்பு மாவட்டமே மிகவும் ஆபத்தான பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments