Home » » செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானங்கள்

செய்தியாளர் மாநாட்டில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானங்கள்

2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாடு இன்றைய தினம் (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சரவைப் பேச்சாளர்களான கௌரவ உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கௌரவ பெருந்தோட்டத்துறை, ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு:
*** இலங்கையில் கொரோனா வைரசு தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட பெரும்பாலான அரச பிரிவினரால் பாரிய பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புலனாய்வு பிரிவு உன்னதமான பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இதற்கமைவாக இந்த பணிகளின் போது அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்புக்கள் மற்றும் அவர்களது செற்பாடு, அவர்கள் செயல்பட்ட முறை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக எதிர்வரும் சனிக்கிழமையன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரையில் ஒளிக் கருவிகள் ஊடகம் மூலமாக நிகழ்ச்சியொன்றை ஒளிபரப்புவதற்கு ஊடகங்கள் பங்களிப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளல்

*** PCR பரிசோதனை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக பெரும்பாலான அமைச்சுக்கள் பங்களிப்பு செய்வதுடன் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பம் , புத்தாக்கம் அமைச்சு பல்கலைக்கழகம் அடங்கலாக நிறுவனங்கள் ஊடாக இதற்காக பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. 

இதில் பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள இந்த இயந்திரங்களை வழங்குவதன் மூலமும் பேராசிரியர்களின் தலைமையிலான பணியாளர் சபை பங்களிப்புடன் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனைகளை நாளாந்தம் 1000 இற்கும் மேற்பட்ட வகையில் அதிகரிப்பதற்காக அதற்கான பணிகளை விரிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல்.

*** சிறுபோகத்தில் 523,000 ஹெக்டர் நிலப்பரப்பில் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 150,000 மெற்றிக்தொன் உரத்தை பெற்றுக் கொள்வதற்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் உரத்தை மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் விவசாயிகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட மேலதிக 16 வகைக்கான உற்பத்திகளை ஊக்குவித்தல். மக்கள் வங்கியினால் அஸ்வென்ன என்ற (அறுவடை) பெயரில் 30 இலட்சம் ரூபா வரையில் விசேட கடன் முறையொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் 200 விசேட கொத்து உர விவசாய கிராமங்களை ஏற்படுத்துதல்.

50 பசுமை பூங்கா மற்றும் அறுவடைகளை விற்பனை செய்யும் 200 விற்பனை நிலையங்களை ஏற்படுத்துதல்.

விசேட விவசாய உற்பத்திகளுக்காக 10,000 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்தல்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி உரிமையாளர்களுக்கு நிதிவசதியைப் பெற்றக் கொடுத்தல் மற்றும் மூடப்பட்ட அரிசி ஆலைகளை மீண்டும் ஆரம்பித்தல்

தற்போதைய நிலைமையின் கீழ் வாழ்வாதாரங்களை இழந்த கலைத்துறைக்குட்பட்ட தொழிற்துறையினருக்கு விசேட கடன் முறையொன்றை ஏற்படுத்தி 1 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரையில் நிவாரண வட்டியின் கீழ் கடனை வழங்குவதற்கான பரிந்துரையை மேலதிக நடவடிக்கைகளுக்காக நிதியமைச்சிடம் சமர்ப்பித்தல்.

*** சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் காலை 4 மணி தொடக்கம் இரவு 12 மணி வரையில் கல்வி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளை ஆரம்பிப்பதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரச ஊடக நிறுவனத்திற்காக மேலதிக அலைவரிசையை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைக்கான பரிந்துரைக்கு கொள்கை ரீதியிலான உடன்பாடு வழங்கப்பட்டமை.

*** வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட துன்பங்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் அமைச்சரவை ஆவணமொன்று வெளிநாட்டுத் தொடர்புகள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இது தொடர்ச்சியாக செயல்படுத்தப்படும்.

*** வெளி நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அந்நாடுகளிலுள்ள தூதரக அலுலகங்கள் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு வந்து தமது சிரமங்களை முறையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 24 மணித்தியாலம் செயல்படுத்தும் 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களது உறவினர்களுக்கான தகவல்கள் மற்றும் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 

இதற்கு மேலதிகமாக பிரதேச செயலகங்களுடன் இணைந்ததாக உள்ள இந்த அலுவலகத்தின் அதிகாரிகளை சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர் உள்ளிட்ட
நிவாரணத் தேவையுடையவர்களின் பட்டியலுக்கு அமைவாக
இலங்கைக்கு அழைத்து வருதல்.

வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு மேலதிகமாக ஒரு தொகையை வழங்குவதற்கு (ரூபாவை) கவனத்தில் கொள்ளுதல்.

*** அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் கீழ் எதிர்காலத்தில் 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைமேற்கொள்ளல்.

பொருளதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்தின் மூலம் 08 பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்

*** மத்திய கொழும்பு நீர்விநியோக திட்டம் மற்றம் கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் அவற்றின் மூலம் இதுவரையில் தொடர்சசியாக நீர்விநியோகம் கிடைக்கப் பெறாத பிரதேசங்களுக்கு நீர்விநியோகத்தை தொடர்ந்து பெற்றுக் கொடுத்தல்

*** பொதுமக்களுக்கு e-Passport வழங்குவதற்காக தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டததை நடைமுறைப்படுத்துதல்.

*** இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இலங்கை போக்குவரத்து சபை எதிர்கொண்டுள்ள ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளித்து பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு நிதிவசதிகளை பெற்றுக் கொடுத்தல்

*** கொரோனா வைரசு பரவுவதை தடுப்பது தொடர்பில் இலங்கை மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக உலக நாடுகளுடன் எடுத்துக் கொண்டால் மக்கள் தொகையில் பத்து இலட்சத்துடன் ஒப்பிடுகையில் நோயை கட்டுப்படுத்துவதில் இலங்கை காத்திரமான நிலையில் இருப்பதற்கு முடிந்துள்ளது.

*** கொரோனா வைரசு தொற்று நிலைமைக்கு மத்தியில் நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் மதிப்பீடு அமைச்சரவை ஆவணமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

*** வந்துராபீனுஎல்ல நீர்த்தேக்க திட்டம் உள்ளிட்டவற்றின் ஆய்வு முதலானவற்றை நடைமுறைப்படுத்தல்.

*** காணி அவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட லிட்ரோ கேஸ் terminal நடத்தப்பட்டு வரும் காணியை அந்த நிறுவனத்திற்கு வழங்குதல்.

*** சுகாதார அமைச்சிற்கு CT Scan இயந்திரமொன்றை பெற்றுக் கொள்ளல்.

*** மொரகொல்ல மின் உற்பத்தி நிலையத்தில் லோட் பி terminal ஜ மேம்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல்

*** ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |