Home » » மட்டு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 
தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை (29.04.2020) மேலும் தெரிவித்த அவர், நோயாளர்களுக்காக சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகளும் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் தற்போது வைத்தியசாலைக்கு வருபவர்கள் சமுக இடைவெளியைப்பேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும், அவசிய தேவை ஏற்படின் மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமூக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைத் தாம் அறிவுறுத்துவதாக கலாரஞ்சினி மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |