Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பொலிஸாரினால் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள்!!

மட்டக்களப்பில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகள் மட்டக்களப்பு தலைமையகப் போக்குவரத்துப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் மற்றும் சுகாதாரத் திணைக்களங்கள் ஊடாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் அது தொடர்பாக மக்களை அறிவுறுத்தவும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் வெளியில் செல்வோர் முன்னெடுக்கவேண்டிய அடையாள அட்டை எண் நடைமுறைகள் குறித்து இதன்போது பொலிஸாரினால் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு தலைமையப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எப்.ஐ.ராஜபக்ஷ தலைமையில் இன்று (வியாழக்கிழமை) இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு நகருக்குள் நுழைவோரும் மட்டக்களப்பு நகரில் இருந்து வெளியில் செல்வோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் போக்குவரத்துப் பேருந்துகளில் சமூக இடைவெளியைப் பேணுதல் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பொலிஸ் பாஸ் நடைமுறைகள் மற்றும் பயணம் செய்யும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் முகக்கவசம் அணியாத பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டனர்.


Post a Comment

0 Comments