Advertisement

Responsive Advertisement

எதிர்வரும் 4ஆம் திகதி பகுதியளவில் முழுமையாக இயங்கவுள்ள கொழும்பு


கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை அடுத்து இலங்கையில் கொழும்பு உட்பட சில மாவட்டங்களில் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ம் திகதி தளர்த்தப்படவிருக்கின்றது.
அன்று முதல் தபால் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திறக்கப்படும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு போன்றவை தபால் அலுவலக கடமை பீடங்களில் வழமை போன்று நடைபெறும்.
கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால்மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04 திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாகதிறக்கப்படும்.
02. இதற்கமைவாக 2020 மே மாதத்திற்கான பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, விவசாய ஓய்வூதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தியக்காரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தும் பணிகள் முன்பு போன்று தபால் அலுவலக கரும பீடங்களில் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
03. நீர்க்கட்டண பட்டியலை செலுத்துதல், மின்சார கட்டணம், தொலைபேசிக் கட்டணம்ஆகியவற்றை செலுத்துவதற்கும் உள்ளூர் இலத்திரனியல் முத்திரை பரிமாறலை மேற்கொள்வதற்கும் உள்ளூர் தபாலுக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொதிகளை கையளிப்பதற்கும் இந்த தினத்திலிருந்து பொதுமக்களுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன.
04. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்று தயவுடன் எதிர்பார்ப்பதுடன் தபால் ஊழியர் சபையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என்றும்எதிர்பார்க்கின்றோம் என இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக தபால் திணைக்கள மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments