Home » » மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் சாதாரண தரப் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அடித்தட்டு மாணவர்களை கொண்டமைந்த வலயமாகும். இங்குள்ள மக்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கூலித்தொழிலை நம்பி தமது வாழ்க்கையினை நடத்துகின்றனர்.

கடந்தகால யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு பிரதேசம் தற்போது கல்வியில் முன்னேற ஆரம்பித்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு வலயம் அகில இலங்கை ரீதியில் 91ஆவது இடத்திலிருந்து இவ்வருடம் 81ஆவது இடத்துக்கு முன்னோக்கி சென்றுள்ளது . 

கன்னன்குடா மகா வித்தியாலய மாணவன் மிலக்சன், நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி கோ.லோவாஜினி, அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவன் பு.கிரோசன் ஆகிய மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி (9A) பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இம் மாணவர்கள் தமது கிராமங்களில் முதன் முறையாக 9A சித்தி பெற்று தமது குடும்பத்திற்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சாதாரண வருமானம் பெறும் வறிய குடும்பங்களை சேர்ந்த இந்த மாணவர்கள் கல்வியில் பெற்ற வெற்றி இவர்களை போன்ற மாணவர்களின் சாதனைக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

பெறுபேறுகள் தொடர்பாக மேற்கு கல்வி வலய கல்வி பணிப்பாளர் சி.ஸ்ரீதரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்...
இந்த வெற்றியானது அனைவரது முயற்சியால் கிடைத்த வெற்றி என்றும் இதற்காக பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்ததுடன் சாதனை நிலை நாட்டிய மாணவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |