Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

சிகரட் வகைகள் விற்பனை செய்வதனை தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருள் உற்பத்திகளுக்கு எதிரான அமைப்பு மற்றும் சுகாதரத் தரப்பினர் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸினால் அதிகளவு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக புகையிலை பொருள் உற்பத்திகளுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் மகேஸ் ராஜசூரிய தெரிவித்துள்ளார்.
புகை பிடிக்கம் போது விரல்கள் உதடு என்பன அடிக்கடி தொடுகையுறுவதனால் இந்த வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் வெகு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு பொதுவாகவே சுவாசப் பிரச்சினைகள் அதிகளவில் காணப்படலாம் எனவும் கொரோனா தொற்றினால் நிலைமை மோசமடையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றாளி பயன்படுத்திய சிகரட்டை பலர் புகைத்த காரணமாக அவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்ட சம்பவமொன்று அண்மையில் பதிவாகியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகைப் பொருள் பாவனையற்ற ஓர் தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு கிரமமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments