Home » » உயர்தர பரீட்சைக்கான சகல கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவுடன் தடை

உயர்தர பரீட்சைக்கான சகல கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளும் நாளை நள்ளிரவுடன் தடை

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான சகல வழிகாட்டல் கருத்தரங்களும், மேலதிக வகுப்புகளும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் முற்றாக தடை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவத்துள்ளதாவது
இதற்கமைய புதன்கிழமை நள்ளிரவில் இருந்து பரீட்சை நிறைவடையும் செப்டெம்பர் 2 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எந்தவிதமான கருத்தரங்குகளையோ வகுப்புக்களையோ நடத்த முடியாது. மாதிரி வினாத்தாள் பத்திரங்களை அச்சிடுவது, விநியோகிப்பது, சுவரொட்டி, பதாதை, துண்டுப்பிரசும் வெளியிடுவது, அச்சு இலத்திரனியல் ஊடகங்களில் பிரசாரம் செய்வதோடு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எவராவது இந்த உத்தரவுகளை மீறிச் செயற்பாட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை செய்துள்ளார்.
அவ்வாறு சட்டத்தை மீறுவோர் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும். பரீட்சைகள் திணைக்களத்திற்கும் பொலிஸ் தலைமையகத்திற்கும் முறைப்பாடு செய்யுமாறு ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், பரீட்சைகள் திணைக்களத்தின்   1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடு செய்ய முடியும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |