Home » » ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 26இல் வெளிவருகிறது

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் 26இல் வெளிவருகிறது

சுயாதீன தொலைகாட்சி சம்பவம் தொடர்பில் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இதற்கமைய, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கருத்திற் கொண்டு தவறிழைத்தவர்களுக்கு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒளிபரப்பபட்ட விளம்பரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் கடந்த 8 மாத காலமாக குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்து வாக்கு மூலங்களை பதிவு செய்து வந்தது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் முன்னதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
இந்தநிலையில், இன்றைய தினமும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமானார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பிற்போடப்பட்டமை காரணமாக சாட்சி கோரல் இடம் பெறவில்லை.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |