( அஸ்ஹர் இப்றாஹிம் , ஏ.கலாபராஜன் )
மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை சாதனைகளாக வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் சாதனைகள் அடையாளப்படுத்தப்பட்டு , ஊக்கப்படுத்தும் வகையிலும் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடியின் 2021 ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை கலைக்கூடத்தில் கடந்த வியாளக்கிழமை மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
பாடசாலை முதல்வர் எம்.சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாகவும் , பட்டிருப்பு வலய பிரதி கல்விப் பணிப்பாளர்களான எஸ்.மகேந்திரன் ( நிர்வாகம் ) , திருமதி ரீ.ராஜசேகர்( திட்டமிடல்) , பீ.திவிதரன் ( அபிவிருத்தி) , எம்.என்.றியாஸா ( முகாமைத்துகலம) , உதவி கல்விப் பணிப்பாளர்களான பீ.திருச்செல்வம் , ஏ.நேசகஜேந்திரன் ) , பீ.தயாசீலன் , ரீ.இதயகுமார் , எஸ்.சுரேஸ் , வலய பணிமனையின் கணக்காளர் திருமதி.எஸ் .சிவகுமார் , முன்னாள் பாடசாலை அதிபர்களான எஸ்.சுப்ரமணியம் , கே.சாந்தலிங்கம் , பொன் வன்னியசிங்கம் , களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரீ.அபேவிக்ரம , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் .நோயல்ரன் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் என்.சந்திரசேகரம் , பழைய மாணவர் சங்க செயலாளர் ரீ.ஐங்கரன் , களுவாஞ்சிக்குடி கிராமத் தலைவர் ஏ.கந்தவேள் , பட்டிருப்பு கிராமத் தலைவர் கே.குணபாலன் , களுதாவளை தேசிய பாடசாலை அதிபர் ஏ.சத்திய மோகன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , பாடசாலை பிரதி அதிபர் ரீ.ஜனேந்திரராஜா , உதவி அதிபர்களான ஆர்.ரவீந்திர மூர்த்தி , ஏ.கலாபராஜன் , எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் , பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவ மாணவிகள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 2019 , 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் தெரிவு செயப்பட்ட 38 மாணவர்களும் , க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் திறமைகளை வெளிப்படுத்திய 8 மாணவர்களும் , 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட் 23 மாணவர்களும் , 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 43 மாணவர்களும் , இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய 13 மாணவர்களும் , தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களை வழிப்படுத்தி விஞ்ஞானப் போட்டியில் கண்டுபிடிப்பாளர்களாக சாதனை புரிவதற்கு காரணகர்த்தாவாக திகழும் பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் எஸ்.தேவகுமார் ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்த்தோடு செயலாளரினால் நன்றியறிதலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளை பாடசாலை ஆசிரியர்களான எஸ்.சரசகோபால் ( தமிழ்) , க.ரூபகன் ( ஆங்கிலம் ) ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.
0 comments: