Home » » மட்­டக்­க­ளப்பு குருக்கள் மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

மட்­டக்­க­ளப்பு குருக்கள் மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள மட்­டக்­க­ளப்பு குருக்கள்மடம் என்னும் பேரூ­ருக்கு சமய, சமூக, பண்­பாட்டுப் பாரம்­ப­ரியம் மிக்க வர­லாற்றுச் சிறப்­புக்கள் நிறைய உண்டு. பெய­ருக்கு பல கிரா­மங்கள் உண்டு. ஆனால் பல­வ­கை­க­ளிலும் சிறப்­புற்று பெயர் பெற்­ற­தா­லேயே பேரூர் என பெயர்­பெற்று புக­ழூ­ரா­கி­யுள்­ளது.
இப்­பு­க­ழூரில் தான் ஸ்ரீலஸ்ரீ செல்­லக்­க­திர்­காம சுவாமி ஆலயம் அமைந்­துள்­ளது. கி.பி. 3ஆம் நூற்­றாண்­டிற்கு முற்­பட்ட (1700 வரு­டங்­க­ளிற்கு முன்) காலப்­ப­கு­தியில் இந்­தி­யா­வி­லுள்ள வேதா­ர­ணியம் என்னும் இடத்­தி­லி­ருந்து குரு என்று அழைக்­கப்­படும் உலக குரு­நாதர், ஈழத்துக் கந்தன் என அழைக்­கப்­படும் கதிர்­கா­மத்­திற்கு பாத­யாத்­தி­ரை­யாக தமது பரி­வா­ரங்­க­ளுடன் மட்­டக்­க­ளப்பு வழி­யாக வந்­துள்ளார். வரும்­போது, ஆலயம் அமைந்­துள்ள இவ்­வி­டத்தின் இயற்கை எழில்­க­ளையும் வச­தி­க­ளையும் கண்டு சிறிது காலம் ஓய்­வெ­டுத்­துள்ளார்.
மீண்டும் தமது பாத­யாத்­தி­ரையை தொடர்ந்து கதிர்­கா­மத்தை அடைந்து கதிர்­காமக் கந்­தனை மன­மு­ருக வேண்டி வழி­பட்ட பின்னர் மீண்டும் குருக்கள் மடத்­திற்கு வந்து இவ­ருக்­கென்று ஒரு மடம் அமைத்து முரு­கனை வழி­ப­டு­வ­தற்­காக கதிர்­கா­மத்­தி­லுள்­ளது போன்று கொத்­துப்­பந்தல் அமைத்து இங்கு வழி­பட்டு வந்தார்.
இவ்­வாறு இருக்­கும்­வே­ளையில் உலக குரு­நாதர் உடல் நலம் குன்­றி­ய­மை­யினால் தான் நோய்­வாய்ப்­பட்டு இருப்­பதை நன்கு உணர்ந்த நிலையில், மேலும் உடல் தளர்ச்சி அடைந்­த­மை­யினால் இனி தான் இவ் உலக வாழ்க்­கையை முடித்து ஆண்­ட­வ­னிடம் செல்­லப்­போ­வதை இறை­ய­ருளால் உணர்ந்து தான் தொடர்ந்த பய­ணத்­தி­னையும், தன்­னையும் நினைத்து வருந்­தினார்.
ஒரு நாள் உலக குரு­நாதர் தான் வழி­பட்­டு­வந்த முரு­கப்­பெ­ரு­மா­னான கொத்­துப்­பந்­தலில் இருந்­த­வாறு "கதிர்­காமக் கந்தா எனக்­கொரு வழி­காட்டு" என்று உள்ளம் உருக வேண்­டினார். அப்­போது கதிர்­கா­மக்­கந்தன் அவர் வழி­பட்ட கொத்­துப்­பந்­தலில் காட்சி கொடுத்­த­தா­கவும் இதனை உலக குரு­நாதர் கண்­கு­ளி­ரக்­கண்டு பேரா­னந்தம் அடைந்­த­தா­கவும் வர­லாறு கூறு­கின்­றது.
உலக குரு­நாதர் தான் அமைத்து முரு­கனை வேண்டி வழி­பட்ட கொத்­துப்­பந்­தலில் கதிர்­காமக் கந்­தனின் காட்­சியை நேர­டி­யாக கண்ட மகிழ்ச்­சியில் கொத்­துப்­பந்­தலை கற்­கோ­யி­லாக அமைத்து 'சின்னக் கதிர்­காமம்' என்று பெயர்­சூட்டி இறை­யடி சேர்ந்தார்.
எனவே உலக குரு­நாதர் அமைத்த இவ் ஆலயம் காலப்­போக்கில் செல்­லக்­க­திர்­கா­ம­மாக மருவி இன்று ஸ்ரீல ஸ்ரீசெல்­லக்­க­திர்­காமம் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. இதேபோல் குரு என்று அழைக்­கப்­படும் இந்த உலக குரு­நா­தரின் பெயரில் இக்­கி­ராமம் குரு­நாதர் மடம் என அழைக்­கப்­பட்டு காலப்­போக்கில் குருக்கள் மடம் என இப்­போது அழைக்­கப்­ப­டு­கின்­றது.
இந்த ஆல­யத்­திற்­கண்­மையில் மணல் மேடுகள் காணப்­ப­டு­கின்­றன.. அந்த மணல் மேட்டில் இருந்து கற்­தூண்கள், கல் உத்­தி­ரங்கள், பண்­டைய கால அவ்­வி­டத்தின் அமை­வுத்­த­ட­யங்கள், கற்­சி­லைகள் (ஏறக்­கு­றைய 7 அடி உய­ர­மான தெய்­வச்­சிலை) என்­பன அந்த மண்­மேட்டில் இருந்து கண்டு எடுக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் இந்த மண் மேட்டை இவ்வூர் மக்கள் ' வேதப்­பிட்டி' என அழைத்து வந்­தனர். வேதப்­பிட்­டியில் கண்டு எடுக்­கப்­பட்ட 7 அடி உய­ர­மான கற்­சி­லையை கல்­லுப்­பிள்­ளையார் என்னும் பெயரில் ஆலய வளா­கத்தில் வைத்து மக்கள் வழி­ப­டு­வதை இன்றும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இந்த வேதப்­பிட்­டியில் கண்­டெ­டுக்­கப்­பட்ட புதையல் பொருட்­களை வைத்து நோக்­கும்­போது இவ்­வி­ட­யத்தில் சமயம் போதிக்கும் மடமோ அல்­லது வேதப்­பா­ட­சா­லையோ ஒன்று இருந்­தி­ருக்­க­வேண்டும் என்­பது புல­னா­கின்­றது. இந்த மடத்தில் உள்ள குருக்கள் ஒரு­வ­ரினால் சுருதி நூல் முறை என்ற அத்­வைத வேதாந்த நூல் எழு­தப்­பட்டு இந்த மடத்­தி­லேயே வைத்து நூல் வெளி­யீட்டு விழாவும் நடை­பெற்­றது என்று வர­லாறு கூறு­கின்­றது.
சமயம் போதித்த இந்த மடம் இருந்த வேதப்­பிட்டி என்னும் இடத்தில் இன்று குருக்கள் மடம் கலை­வாணி மகா வித்­தி­யா­லயம் இயங்­கு­கி­றது, அது­மட்­டு­மில்­லாது, ஆலய வளா­கத்­திலே இப்­போது மாடிக்­கட்­ட­டத்தில் நூல் நிலையம் அமைத்து மக்­க­ளிற்கு அறிவை வளர்ப்­ப­தற்கு உத­வு­கின்­றது. குரு­நாதர் அவர்கள் ஆல­யத்­திற்கு என்று ஆலய வளா­கத்தில் நந்­த­வனம் ஒன்று அமைத்து பூ மரங்கள் நட்டு பூசை வழி­பாட்­டிற்குத் தேவை­யான மலர்­களை நந்­த­வ­னத்­தி­லி­ருந்து எடுத்து வந்து முரு­கப்­பெ­ரு­மானை பூக்­களால் அலங்­க­ரித்து வழி­பட்டு வந்தார். காலப்­போக்கில் அவ்­வி­டத்தில் தென்னை மரங்கள் வைத்து இப்­போது தென்­னந்­தோட்­ட­மாக காட்­சி­ய­ளிக்­கின்­றது.
ஆல­யத்தின் பின்­பு­றத்தில் வங்­கினா (சகல வச­தி­க­ளை­யும்­கொண்ட கட்­டடம்) என்று பல­ராலும் அழைக்­கப்­படும் இந்த இடத்­திற்குப் பின்னால் இவ் ஆல­யத்­திற்கு என்று அமைக்­கப்­பட்ட தீர்த்­தக்­குளம் காலப்­போக்கில் கைவி­டப்­பட்டு இப்­போது தீர்த்­தோற்­சவம் மிகச் சிறப்­பாக இந்து சமுத்­தி­ரத்தில் நடை­பெ­று­கின்­றது.
ஆலய பரி­பா­ல­ன­சபைக் கூட்டம் நடை­பெ­று­வ­தற்­காக இவ் ஆல­யத்­திற்கு என்று குருக்கள் மடம் கிரா­மத்­திற்கு மத்­தியில் கூட்­டத்­து­வ­ளவு என அழைக்­கப்­படும் காணியும் உள்­ளது. மழைக்­காலம் வந்­து­விட்டால் தானா­கவே ஆல­யத்­திற்கு அண்­மையில் நீரோடை உரு­வாகி ஆல­யத்தை மேலும் சிறப்­புற வைக்­கின்­றது.
இந்த நீரோடை நெடுஞ்­சா­லையை ஊட­றுத்துச் செல்­வ­தற்­காக ஆல­யத்­திற்கு முன்னால் தாம் போதி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மல்­லாமல் இவ் ஆல­யத்­திற்கு என்று மிக அண்­மையில் சித்­தி­ரத்தேர் ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது.
இவ்­வ­ளவு சிறப்­புக்­களும் பெற்று விளங்கும் இவ் ஆல­யத்­திற்குள் கடந்த 01.06. 2013 ஆம் திகதி இனந்­தெ­ரி­யாத விஷ­மிகள் புகுந்து ஆலய விக்கிரங்கள் (19) பத்தொன்பதை உடைத்து சேதப்படுத்திய பின்னர் கிராமமக்களினதும், தமிழ் அரசியல்வாதிகளினதும் நிதி உதவிகளைப் பெற்று சிறப்பான முறையில் புனரமைக் கப்பட்டுள்ளது.
நாளை கிரியைகள் ஆரம் பிக்கப்பட்டு 8ஆம் திகதி எண்ணெய் க்காப்பும் 9ஆம் திகதி அன்று மஹா கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து நடை பெறும் நிகழ்வுகளைய டுத்து 21ஆம் திகதி அன்று சங்காபிஷேகத்துடன் ஏககுண்ட கும்பாபிஷேக நிகழ்வு கள் முடிவுறும்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |