Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் அதிா்ச்சி - கடலில் மாணவன், மாணவியின் சடலம் (புகைப்படங்கள்)

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை சுற்றுலாவின் நிமித்தம் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையிலிருந்து மட்டக்களப்பு முகத்துவாரக் கடலுக்குச் சென்ற மாணவர்களே இவ்விதம் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடலில் குளித்துக் கொண்டிருந்த மாணவர்களில் நால்வர் நீரில் மூழ்கிய போதிலும் அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிரவின் மற்றும் செல்வராணி ஆகியோரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுபாஷினி மற்றும் ராஜபிரபா ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை உயிரிழந்த மாணவர்கள் இருவரினதும் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர் இருவரும் மற்றும் காயமடைந்த மாணவர் இருவர் என நால்வரும் 14 வயதுடைய ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது. மட்டக்களப்புப் பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments